Raja Rani 2 Today Episode | 04.02.2022 | Vijaytv
Raja Rani 2.04.02.2022
ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் தனக்கு வந்த அழைப்பை வைத்து என்ன பிரச்சனை என்று தெரியாமல் பதட்டமாக காவல் நிலையத்தில் நுழைந்தார். அங்கு அர்ச்சனா மற்றும் செந்தில் இருக்கும் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். செந்திலை பார்த்து நடந்ததை விசாரித்தார். செந்தில் செய்த மொத்த கதையையும் கூறினார். இதை கேட்டு சரவணன் கோபம் கொண்டார். வீட்டில் போய் சொல்லிவிட்டு வர என்ன அவசியம்? வீட்டில் விவரத்தை சொல்லி நல்ல இடங்களுக்கு போவதை விட்டு இப்படி ஒரு பிரச் சிக்கி கொண்டு நிக்கிரீங்கள் என்று கோபம் கொண்டார். போலீஸ் அதி காலை வரை காத்திருக்க வைத்து பின் சரவணனை விசாரித்தார். அவரும் இது என் தம்பி மற்றும் தம்பி மனைவி தான் என்று குடும்ப படத்தை எடுத்து காட்டினார். விவரங்கள் அனைத்தையும் கூறினார். இதனால் போலீஸ் இனி இந்த மாதிரியான இடத்திற்கு வர வேண்டாம் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். வீட்டில் காலை 6.30 மணி ஆகியும் இன்னும் சரவணன் வரவில்லையே என்று பதட்டத்தில் இருந்தார்கள். சரவணனுக்கு மாறி மாறி அழைத்து பார்த்தார்கள். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. பின் வரும் வழியில் செந்தில் அர்ச்சனா இருவருக்கும் அறிவுரை கூறினார். வாழ்கையில் என்னைக்குமே பொய் நமக்கு நல்லது செய்யாது உண்மையாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அர்ச்சனா இப்போதும் தன் தவறை உணராமல் சரவணன் மீது தான் கோபம் கொண்டார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…