Raja Rani 2 Today Episode | 04.07.2022 | Vijaytv
Raja Rani 2. 04.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கடையில் வீட்டில் நடந்த குழப்பங்களை நினைத்து பார்த்தார். ரவி அப்பா அவரை பார்த்து பேசி ஆறுதல் கூறினார். ஆனாலும் சிவகாமி அம்மாவுக்கு தானும் சந்தியாவும் பெரிய துரோகம் செய்துவிட்டதாக நினைத்தார் சரவணன். மேலும் தான் செய்த தவறுக்கு சந்தியா தண்டனை அனுபவிப்பதகாக நினைத்தார். வீட்டில் சந்தியாவை தனியாக குதிக்காட்டலாக பேசினார் சிவகாமி. கிடைக்கும் இடம் எல்லாம் சந்தியாவை தனியாக நடத்தினார் சிவகாமி. சந்தியாவின் துணிகளை தனியாக எடுத்து கஞ்சி போட்டு தேய்ச்சு கொடுக்கும்படி கூறினார். மேலும் அனைவரும் சாப்பிடும்போது சந்தியாவை மட்டும் உக்கார வைத்து சாப்பாடு பரிமாறினார். அதுவும் முட்டைகளை 4 5 என கணக்கு இல்லாமால் அள்ளி வைத்து அவரை சங்கடப்படுத்தினார். பின் நேரடியாகவே நீ போலீஸ் ஆக வேண்டும் என்பதால் தானே என் மகனுக்கு ஒரு குழந்தையை பெற்று கொடுக்கவில்லை என்று கேட்டார். ஆனால் அதை கேட்டதும் சந்தியா வருந்தினார் அப்படி எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்றார். ஆனால் சிவகாமி அதை காது கொடுத்து கேட்கவே இல்லை. இதனால் சந்தியா தான் செய்த பெரிய தவறு என் கனவை சரவணன் இடம் சொன்னது மட்டுமே. அதை சொல்லாமல் இருந்து இருந்தால் இப்போது வீட்டில் எந்த பிரச்னையும் வந்து இருக்காது என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…