Raja Rani 2 Today Episode | 05.01.2022 | Vijaytv
rajarani2.05.01.2022
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன், ஹென்னா மற்றும் சல்மா மூவரும் முடிவுக்காக காத்திருந்தார்கள். மூன்றாவது இடத்தை பெற்றது சல்மா என அறிவித்தார்கள். சல்மாவுக்கு அதில் வருத்தம். தன்னால் முதல் பரிசை வாங்க முடியவில்லையே என்று. பின் சரவணன் தான் முதல் பரிசை தட்டி சென்றார் என்று அறிவித்தார்கள். அதை கேட்டதும் சரவணன் மற்றும் குடும்பத்தில் அனைவரும் துள்ளி குதித்து கொண்டாடினார்கள். ஆனால் அர்ச்சனாவுக்கும் ஆதிக்கும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பின் சரவணனுக்கு பரிசாக 5 லட்சம் பணமும் மெடல் என்று கவுரவம் செய்தார்கள். பின் சரவணன் தன் மனைவி மற்றும் அம்மாவை மேடைக்கு அழைத்தார். சிவகாமிக்கு பெருமை தாங்கவில்லை. சரவணன் தன் வெற்றிக்கு முழுக்க முழுக்க சந்தியாதான் காரணம் என்று கூறினார். பின் சிவகாமியும் அதற்கு உறுதுணையாக இருந்தார் என்று கூறினார். அனைவரும் சரவணனை பாராட்டினார்கள். பின் தென்காசிக்கு கிளம்பினார்கள். ஊரே திரண்டு வந்து சரவணனை சூழ்ந்தார்கள்.பாராட்டுகள் வந்து குவிந்தன. இதையெல்லாம் அர்ச்சனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் வில்லத்தனம் செய்ய முடிவு செய்தார். அடுத்து என்ன நடந்தது நடந்தது? காணொளியை பார்க்க…