Raja Rani 2 Today Episode | 05.03.2022 | Vijaytv
Raja Rani 2. 05.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மனதில் சந்தியாவின் கனவை அவர் வாயாலே சொல்ல வைக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் பார்வதி இடம் அடுத்து படிப்பு முடித்து என்ன செய்ய போகிறாய் என்று கேட்டார். அதற்கு பார்வதி காலேஜ் முடித்ததும் பாஸ்கரை திருமணம் செய்வது தான் அடுத்த வேலை என்றார். ஆனால் சரவணன் மீண்டும் அதை தாண்டி உனக்கு ஒரு கனவு வேலை எதுவும் இல்லையா என்று கேட்டார். அதற்கு சிவகாமி இடையில் புகுந்து, அவளே அமைதியாக தானே இருக்கிறாள் உன் வேலையை பாரு என்று கிளப்பிவிட்டார். பின் கடையில்வெளை இருப்பதாக கூறி சந்தியாவை அழைத்து சென்றார் சரவணன். அருகில் உள்ள ஒரு பார்க்கில் அமர்ந்து சரவணன் பேச ஆரம்பித்தார். சந்தியாவிடம் நேரடியாக அவரது ஆசை லட்சியம் என்னவென்று கேட்டார். முதலில் சொல்ல மறுத்த சந்தியா பின் அவர் மனதில் இருப்பதை கொட்டினார். தனக்கும் தன் தந்தைக்கும் போலீஸ் ஆகும் கனவை பற்றி அவர் கூறினார். ஆனால் அந்த கனவு என் அப்பா அம்மா இறக்கும்போது சேர்ந்து இறந்து விட்டது என்றார். சரவணன் நம்பிக்கை கூறினார். இனி உங்கள் கனவு என் கனவு போல். உங்களை போலீஸ் அதிகாரி ஆக்க வேண்டியது என் பொறுப்பு என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..