Raja Rani 2 Today Episode | 05.05.2022 | Vijaytv

Raja Rani 2. 05.05.2022

Raja Rani 2. 05.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி தானும் பார்வதியும் எடுத்த அத்தனை புகை படங்களையும் மண்டபத்தில் இருந்த அனைவரிடமும் கொடுத்தார். மேலும் பார்வதியும் அவரும் எப்படி காதலித்தோம் என்றும் கூறினார். உடனே அர்ச்சனா அவர் வேலையை ஆரம்பித்தார். பார்வதி தவறு செய்தவள் போல் பேசினார். மேலும் இதை மூடி மறைத்து சந்தியாவாள் தான் இன்று திருமணம் நின்றுவிட்டது என்று கூறினார். மேலும் இந்த திருமணம் நின்று விட்டது என்றும் கூறினார். அந்த நேரம் பாஸ்கர் அம்மா விக்கியை ஓங்கி ஒரு அறை விட்டார். உன்னை போல் பொருக்கியை வேண்டாம் என்று பார்வதி சொன்னதில் என்ன தவறு என்று கேட்டார். மேலும் இந்த விவரங்கள் அனைத்துமே எனக்கு ஏற்கனவே தெரியும் என்றார். சந்தியா என்னிடம் எல்லா உண்மையையும் சொல்லி மன்னிப்பு கேட்டார். மேலும் பார்வதி மேல் எந்த தப்பும் இல்லை என்று எனக்கு தெரியும். பார்வதி தான் என் வீட்டு மருமகள் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். இது கேட்ட அர்ச்சனா அதிர்ச்சியில் உரைந்தார். மேலும் சந்தியா அங்கு வந்த அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார். இது போல் உங்கள் பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் உங்கள் பெண்ணை நம்ப வேண்டும். மேலும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்றார். இந்த மாதிரி புகை படங்களை வைத்து மிரட்டுவனுக்கு இது போன்ற தைரியமான குடும்பங்கள் ஒன்றாக நின்றாள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author