Raja Rani 2 Today Episode | 05.07.2022 | Vijaytv
Raja Rani 2. 05.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சிவகாமி இடம் தன்னிடம் சரியாக பேசும்படி கேட்டுகொண்டார். சிவகாமி மூஞ்சி கொடுத்து பேசாமல் இருப்பது தனக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதை வெளிப்படுத்தினார். மேலும் இனி தனக்கு படிப்பு வேண்டாம். இந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து தான் எனக்கு இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால் அது தேவை இல்லை என்றார். ஆனால் சரவணன் அதை உடனே மறுத்தார். போராடி இந்த நிலையை கடந்து படிக்க வேண்டும் என்று கூறினார். உடனே சிவகாமி, அதான் உன் புருஷன் கட்டளை போட்டுவிட்டேனே பின் எதற்கு படிப்பை நிறுத்த வேண்டும் என்று கோவமாக பேசினார். மேலும் தான் கொடுத்த வாக்கு படி சந்தியா மூன்று தவறுகள் செய்தால் மன்னிப்பேன். நான்காவது தவறுக்கு பின் அவரது போலீஸ் கனவை நிறுத்த வேண்டும் என்று கூறினார். பின் அடுத்த நாள் படிக்க சந்தியாவை கிளாஸ் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார் சரவணன். ஆனால் இன்று கிளாஸ் நடக்காது என்று கூறினார்கள். என்ன என்று விசாரித்ததில் சாமியார் இன்று சிறப்பு பஜனை ஒன்று நடத்த உள்ளதாகவும், அதனால் மக்கள் கூற்றம் அதிகம் ஆகும் என்பதாலும் நிறுத்திவிட்டதாக கூறினார்கள். இதை கேட்ட சந்தியா கோவத்தில் கொந்தளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…