ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வெற்றியுடன் வீடு திரும்பியதும் சந்தியாவுக்கு அந்த தொப்பியும் கோப்பையும் அவருக்கு அணிவித்து அழகு பார்த்தார். சந்தியாவால் தான் இவளோ பெரிய விஷயம் நடந்தது என்று புகழ்ந்தார். அர்ச்சனா வீட்டுக்கு வந்ததில் இருந்து எரிச்சலோடு இருந்தார். சரவணன் பரிசு வாங்கியதை அர்ச்சனாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. செந்தில் தன் மனைவிக்காக ஆசையாக சென்னையில் ஒரு புது ஆடை வாங்கி வந்து இருந்தார். அதை அர்ச்சனாவிடம் கொடுத்தார். அவர் சந்தோசபடாமல் மேலும் எரிச்சல் அடைந்தார். சரவணன் கடைக்கு சென்று வியாபாரம் பற்றி விசாரித்தார். சரக்கு அனைத்தும் தீர்ந்து விட்டது ஆனால் பணம் சேரவே இல்லையே என்று கேட்டார். பின் சக்கரை அவர் இல்லாத நேரம் என்ன நடந்தது என்று விவரித்தான். சரவணன் இதை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறினார். தானே அதை சரி செய்துகொள்வதாக கூறினார். சற்று நேரத்தில் ஹென்னா சரவணனுக்கு அழைத்து பேசினார். தென்காசிக்கு வருவதாகவும் அனைவரையும் சந்திப்பதாகவும் கூறினார். ஆதியும் சரவணன் வெற்றி அடைந்ததை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதனால் பார்வதிக்கும் ஆதிக்கும் வாக்குவாதம் வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…