Raja Rani 2 Today Episode | 06.07.2022 | Vijaytv
Raja Rani 2. 06.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தான் படிக்கும் இடத்தில் இப்படி ஒரு சாமியார் வந்து இருப்பது சரி இல்லை என்று நினைத்தார். இதனால் தன் படிப்பு கெடுவதோடு இல்லாமல், இவர் ஒரு போலி சாமியார் என்றே நினைத்தார். ஆனால் எப்படி இதை எல்லாம் தடுப்பது என்று புரியாமல் நின்றார். சரவணன் இடம் இதை பற்றி பேசினார். அவரும் ஆறுதல் கூறினார். அப்போது சரவணன் தன் அக்கவுண்ட்டில் இருந்து 10000 ரூபாய் யாரோ எடுத்து இருப்பதை கூறினார். மேலும் இது போல் ஒரு முறை ஏற்கனவே நடந்தது என்று கூறினார். உடனே சந்தியா அதிர்ச்சி அடைந்தார். இதற்கு உடனே எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார். அடுத்த நாளே அதற்கு முயற்சியும் எடுத்தார். அதே நேரம் அந்த சமையாருக்கு கோவில் கட்டுவதை பற்றி பேச ஊர் பெரியவர்கள் வந்து இருந்தார்கள். இந்த கோவில் கட்டும் பணிக்கு நன்கொடை வாங்க ரவியை தான் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் சந்தியா வுக்கு அதை கேட்டதும் எரிச்சல் அடைந்தார். சிவகாமி அம்மா தன் பங்காக முதல் நன்கொடையாக 10000 வழங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…