Raja Rani 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஜெஸ்ஸி வீட்டுக்கு மன்னிப்பு கேட்க வந்தார்கள். ஆனால் ஜெஸ்ஸியின் அம்மா அப்பா அதற்கு முன், சந்தியா சரவணன் இருவருமே போலீசில் புகார் கொடுக்க விடாமல் தடுத்துவிட்டு பின் இந்த திருமணத்தை பற்றி பேசவே இல்லை. ஒதுங்கியே இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் அவர்களும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று நினைத்தார். அப்போது சந்தியா சரவணன் அவர்கள் வீடு தேடி வந்து இருந்தார்கள். ஆனால் அவர்களை வீட்டுக்குள் கூட அழைக்கவில்லை. பின் அவர்கள் வந்ததும், தன் தம்பி செய்தது பெரிய தவறு என்று கூறினார். என் தம்பி மேல் இருந்த நம்பிக்கையால் உங்களையும் உங்கள் மகளையும் தவறாக பேசிவிட்டதாக கூறினார். என் குடும்பம் சார்பாக நாங்கள் மன்னிப்பு கெட்டுகொல்வதாக கூறினார் சரவணன். ஆனால் ஜெஸ்ஸியின் அப்பா இந்த மன்னிப்பு எல்லாம் தங்களுக்கு தேவி இல்லை. ஆதி மற்றும் ஜெஸ்ஸி திருமணம் நடக்க வேண்டும் அதற்கு என்ன முடிவு என்று கேட்டார். ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார் சரவணன். பின் ஆதி வீட்டுக்கு வந்தது, சிவகாமி அம்மாவின் நிபந்தனைகள் என்ன என்று கூறிவிட்டார். இதை போல் மத அடையாளம், அம்மா அப்பா, சொந்தம் அனைத்தயும் விட்டு என் பெண்ணை அந்த வீட்டில் விட நாங்கள் தயார் ஆக இல்லை என்றார். மேலும் சரவணன் மற்றும் சந்தியாவை தாழ்வாக பேசினார். இதனால் வேறு வழி இல்லாமல் இருவரும் அந்த இடத்தைவிட்டு கிளம்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author