Raja Rani 2 Today Episode | 06.12.2022 | Vijaytv

Raja Rani 2. 06.12.2022

Raja Rani 2. 06.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா கிளம்பிய அடுத்த நாளே செந்தில் சரவணன் இருவரும் இப்படி தேர்தலில் நிற்பதை பார்த்து சிவகாமி அம்மா அழுது புலம்பினார். இதில் அர்ச்சனாவின் அம்மா செந்தில் வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல், சரவணன் மண்ணோடு மண்ணாக போய் விடுவார் என்று பூஜை செய்ததை பார்த்து மேலும் கோவத்தில் கத்தினார் சிவகாமி. ஆனால் செந்தில் மேலும் தன்னை விட சரவணனுக்கு தான் எப்போதுமே மரியாதை கொடுப்பீர்கள். என்னை எதிலுமே நம்பியது இல்லை என்பது போல் பேசினார். ஆனால் கடைசியில் சரவணன் இதை பற்றி இனி யாரும் பேச வேண்டாம். போக போக செந்திலுக்கு எல்லாம் புரியும். அம்மா அப்பா யாரையும் பாகுபாடாக பார்க்கவில்லை என்று புரியும் என்று பேசி அனுப்பினார். அடுத்த நாள் பயிற்சி ஆரம்பிக்க அனைவரும் கூடினார்கள். ஆனால் சந்தியா இன்னும் வரவில்லை என்று சொன்னதும் கௌரி கோவம் கொண்டார். உடனே அவருக்கு அழைத்து பேச ஜோதியை அனுப்பினார். ஜோதி எத்தனை முறை அழைத்தாலும் சந்தியா ஃபோன் அனைத்து வைத்து இருந்தது. பின் சரவணனுக்கு அழைத்து இன்னும் சந்தியா வரவில்லை என்று கூறியதும் பதறினார். இன்னும் வரவில்லை என்றால் இங்கு போனார் என்று புரியாமல் அனைவரும் இருந்தார்கள். ஆதி ஜெஸ்ஸிக்கு தெரியாமல் எப்போதும் போல் மாமனார் வீட்டுக்கு சென்று பஞ்சப்பாட்டு பாடி அவர்களிடம் இருந்து பணம் வாங்கினார். செந்தில் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அதை சரவணன் தூக்கி அழுகையை அமத்தினார். அர்ச்சனா அதை பார்த்து தன் குழந்தையை எதவ்து செய்து விடுவார் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author