ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தான் வாங்கிய பரிசு புகழ் அனைத்தும் சந்தியாவால் மட்டுமே நடந்தது என்று சந்தியாவை புகழ்ந்தார். சந்தியாவோ இது முழுக்க முழுக்க சரவணன் திறமைக்கு கிடைக்க வேண்டிய மரியாதை என்று கூறினார். அப்போது சரவணன் எனக்கும் இந்த மாதிரி போட்டி புகழ் எல்லாம் பார்த்து ஆசை பட்டு இருக்கேன் ஆனால் என்னால் முடியும் என்று நம்ப வைத்து இவளோ தூரம் வந்தது உங்களால் தான் என்று சந்தியாவை புகழ்ந்து பேசினார். பின் சந்தியாவுக்கு இது போல் ஏதேனும் ஆசை கனவு எதும் உள்ளதா என்று கேட்டார். அப்போது சந்தியா தன் ஐ. பி.எஸ் கனவை சொல்லலாமா என்று யோசித்தார். பின் இதை சொல்லி அவர் மனது வருந்துமோ என்று எனக்கு எந்த கனவும் இல்லை என்றார். சரவணன் கடையில் நடந்த விஷயத்தை யோசித்துக்கொண்டு இருந்தார். இதை பார்த்த ரவி என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு சரவணன் தன் கடையில் என்ன நடந்தது. அர்ச்சனா மற்றும் செந்தில் என்ன செய்தார்கள் என்று கூறினார். இதை கேட்டு ரவி கோவம் கொண்டார். இப்போவே சிவகாமியிடம் சொல்ல போகிறேன் என்றார். ஆனால் சரவணன் தடுத்தார். அவரே இதை சரி செய்து கொள்வதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…