Raja Rani 2 Today Episode | 07.03.2022 | Vijaytv
Raja Rani 2. 07.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டதால் சந்தியா அவர் மனம் திறந்து பேசினார். தன் ஆசை கனவு லட்சியம் என்று அனைத்தையும் சரவணன் இடம் கூறினார். ஆனால் இதனால் வீட்டில் பிரச்சனை வரும் என்பதால் தான் வெளியில் சொல்லவில்லை என்றார். ஆனால் சரவணன் எந்த பிரச்சனை வந்தாலும் தான் நின்று அவருக்கு உதவி செய்து சந்தியாவை போலீஸ் ஆக்குவேன் என்று கூறினார். சந்தியா இதனால் குடும்பத்தில் பிரச்சனை வரும் வேண்டாம் என்றார். ஆனால் சரவணன் அவர் முடிவில் உறுதியாக இருந்தார். பின் வீட்டுக்கு வந்ததும் உடனே சந்தியாவை படிக்கும்படி கூறினார். அவர் படிக்கும்போது சோர்வாக இருந்த நேரம் அவருக்கு இஞ்சி டீ மற்றும் லெமன் டீ என்று பார்த்து பார்த்து கவனித்தார் சரவணன். பின் சரவணன் தூங்கிய பின்னும் சந்தியா படித்தார். இதை அந்த வழியாக சென்ற அர்ச்சனா கவனித்தார். சந்தியா இவளோ பெரிய படிப்பு படித்து மீண்டும் எதற்காக படிக்கிறாள் என்று குழம்பினார். ஆனால் இதை இப்படியே விட கூடாது சிவகாமியிடம் இதை பற்றி சொல்லி சந்தியாவை திட்டு வாங்க வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…