Raja Rani 2 Today Episode | 07.06.2022 | Vijaytv
Raja Rani 2. 07.06.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அனைத்து பிரச்சனையும் சரி ஆகி விட்டது என்று குடும்பமாக சேர்ந்து கோவிலுக்கு வந்தார்கள். சரவணனுக்கு முதல் மரியாதையாக பரிவட்டம் கட்டினார்கள். மேலும் புது தம்பதியாக பார்வதி மற்றும் பாஸ்கர் இருவருக்கும் மரியாதை செய்தார்கள். அப்போது பூசாரி சக்கரை எடுத்துக்கொள்ளும்படி கூறியதும் சக்கரையின் நியாபாகம் வந்தது. உடனே சந்தியா சக்கரை மேல் தான் வேறு குண்டு எதுவும் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே சக்கரையை தேட ஆரம்பித்தார். சந்தியா மற்றும் சரவணன் இருவருமே தேடி கடைசியில் சக்கரையை கண்டு பிடித்தார்கள். செல்வம் எதாவது உன்னிடம் சொண்ணான என்று கேட்டார்கள். சக்கரையும் இந்த சட்டையை கழற்ற வேண்டாம் என்றார் என்று கூறினான். உடனே அந்த சட்டையை சோதனை செய்து பார்த்தால் அதில் பாம் இருந்தது. அதையும் அனதிய கண்டு பிடித்து உடனே அதை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் அதை நிறுத்த முடியவில்லை. இதனால் உடனே சரவணன் அந்த குண்டை தன் கையில் எடுத்துக்கொண்டு மக்கள் இல்லாத இடத்துக்கு ஓடினார்கள். மேலும் அவர் பின்னாடியே அவரது குடும்பத்தார்கள் ஓடினார்கள். ஆனால் சரவணன் தனியாக அந்த குண்டை எடுத்துக்கொண்டு ஓடி ஒரு ஆற்றுக்குள் வீசி எறிந்தார். இதனால் சரவணனுக்கு எதாவது ஆபத்து வந்து விட்டது என்று நினைத்தார்கள் குடும்பத்தார்கள். ஆனால் அதில் இருந்து தப்பித்து வந்தார் சரவணன். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…