ராஜா ராணி 2 தொடரில் இன்று , ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சேர்ந்து ஜெஸ்ஸிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்தார்கள். ஆனால் இங்கு போகிறோம் என்று சொல்லாமல் கூப்பிடவே ஜெஸ்ஸிக்கு ஒரே பயம் பதட்டமாக இருந்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் பெற்றோர்களுடன் கிளம்பினார். மருத்துவமனையில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் எதற்காக இங்கு வந்தோம் என்று கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தார். ஆனால் அவரது பெற்றோர்கள் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை. இதனால் ஜெஸ்ஸி மேலும் பயப்பட ஆர்மபித்தார். டாக்டர் இடம் அவரது பெற்றோர் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு இருந்த ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண் தனக்கு கருகலைப்பு செய்ய வந்துள்ளதாக கூறினார். இதனால் ஜெஸ்ஸி தனக்கும் அதை தான் செய்ய போகிறார்கள் என்று தவறாக நினைத்தார். மேலும் உடனே சரவணன் சந்தியாவுக்கு இந்த தகவலை தெரிவித்தார். உடனே அவர்களும் விரைந்து வந்தார்கள். சரவணன் வந்ததும், இது ஆதியின் குழந்தை, எங்கள் வீட்டின் வாரிசு அதை எப்படி கலைக்கலாம் என்று கோவம் கொண்டார். ஆனால் நாத டாக்டர், மற்றும் ஜெஸ்ஸியின் பெற்றோர் இருவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு குழந்தையை அளிக்கும் அளவுக்கு மோசமான குணம் எங்களிடம் இல்லை என்று கூறினார்கள். பின் ஜெஸ்ஸி நடப்பதை வைத்து தவறாக புரிந்து கொண்டது புரிந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…