Raja Rani 2 Today Episode | 07.12.2022 | Vijaytv
Raja Rani 2. 07.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இன்னமும் பயிற்சிக்கு வரவில்லை என்று சரவணன் பதறினார். மீண்டும் மீண்டும் அவருக்கு முயற்சி செய்தார். ஆனால் அவர் ஃபோன் எடுக்கவில்லை. பின் கௌரி பயிற்சிக்கான விதிமுறைகள் ஒவ்வொன்றாக கூறினார். அதில் இன்று படகு போட்டி ஒன்று நடக்க போகிறது. ஆனால் அது குழுவாக இல்லாமல் தனியாக அவர் அவருக்கு தான் செய்யும் முயற்சியை பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறினார். அதற்கு அவரவர் வீட்டில் உள்ளவர்கள் இடம் கண்டிப்பாக எங்களுக்கு எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அதற்கு நாங்கள் மட்டுமே பொறுப்பு என்று எழுதியும் தர வைத்தார்கள். இது எல்லாம் முடிந்த பின்னே சந்தியா அங்கு வந்து சேர்ந்தார். அவர் அந்த போட்டிக்கு என்ன விதிமுறை என்றே தெரியாமல் சம்மத்ம் சொன்னார். அர்ச்சனா கடையில் புடவை வாங்க வந்தவர்கள் இடம் புடவி கமித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஜெஸ்ஸிதான் அந்த பெண்ணுக்கு அலங்காரம் செய்வது போல் பேசினார்கள். உடனே ஜெஸ்ஸி வியாபாரத்தை கெடுக்க நினைத்து அவர் செய்யும் வேலையை தவறாக பேசினார். மேலும் ஜெஸ்ஸி அலங்காரம் செய்தால் நிறைய பிரச்சனை உடம்பில் வருவதாக கூறினார். இதை கேட்டு அவர்களும் குழம்பி போனார்கள். அடுத்து ஜெஸ்ஸி அவர்களுக்கு மணி ஆகி விட்டது என்று அழைக்கும் போது இது பற்றி விசாரித்தார். உடனே ஜெஸ்ஸி இது கண்டிப்பாக அர்ச்சனாவின் வேலையாக தான் இருக்கும் என்று கண்டு பிடித்தார். உடனே அர்ச்சனா கடையில் இருக்கும் பொருட்கள் எல்லாம் போலி, ஏமாற்றுகிறார்கள் என்று கூறினார். செந்திலை பரந்தாமன் அழைத்த அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்து அவரை சரக்கு அடிக்கவும் வைத்தார். வேண்டாம் என்று கூறினாலும் விடாமல் அவரை குடிப்பழக்கத்தை வர வைத்தார். மேலும் சரவணன் பதிவு ஆசை வந்து ஆடுவதாக பேசி செந்திலுக்கு சரவணன் மீது கோவத்தை வர வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….