Raja Rani 2 Today Episode | 08.02.2022 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு வருடத்திற்கு முன் கொடுத்த புகார் பற்றிய தகவலை கூறினார். அந்த புகார் பிரியா என்ற பெயரில் தன் வந்தது எனவும், அர்ச்சனாவின் வீட்டு முகவரி இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட குடும்பதார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ரவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி ஒரு நாடகம் ஆடி நம் வீட்டு மானத்தையும், உன்னையும் வன்மத்தில் இருந்திருக்கிறார் என்று கூறினார். சரவணன் தன் அம்மாவையே ஜெயிலுக்கு அனுப்பியவர் அர்ச்சனா தான் என்று தெரிந்ததும் கோவம் உச்சம் தொட்டது. இதில் செந்திலுக்கு பங்கு இருக்கும் என்று கூறினார். இதை நான் சும்மா விட போவது இல்லை என்று பொங்கினார். மத கோவத்தில் அர்ச்சனா செந்தில் இருவரும் பொய் சொல்லிதான் குத்தாலதுக்கு ஓர் சுற்ற சென்ற விஷயத்தை உலரினார். இதை கேட்ட சிவகாமி இன்னும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் அனைவருக்கும் அர்ச்சனா அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிய வந்தது. பின் அர்ச்சனா செந்தில் இருவரையும் அழைத்து சிவகாமி பேசினார். இப்போ அர்ச்சனாவின் அம்மா எப்படி உள்ளார் என்று விசாரித்தார். அதற்கு சிவகாமிக்கு உண்மை தெரியும் என்ற விஷயம் தெரியாமல் மேலும் மேலும் பொய்களை அடுக்கினார் அர்ச்சனா. ஆனால் செந்தில் அப்படி பொய் சொல்ல முடியாமல் தெனரிப்போய் நின்றார். சிவகாமி பூஜை அறை முன் நிற்க வைத்து சூடத்தை பற்ற வைத்து இதில் சத்தியம் செய்யுமாறு கூறினார். செந்திலால் சாத்தியம் செய்ய முடியவில்லை. தான் செய்த தவறை ஒற்றுகொண்டார். பின் சிவகாமி புகார் கொடுத்தது அர்ச்சனா தான் என்று கூறினார். அதை கேட்டதும் செந்திலுக்கு அதிர்ச்சி. ஆனால் சரவணன் இருவரும் சேர்ந்து தான் இந்த வேலையை செய்து இருப்பீர்கள் என்று கூறினார். ஆனால் செந்தில் தனக்கு இந்த விஷயங்கள் அனைத்தும் முன்னதாகவே தெரியாது என்று கூறினார். பின் அர்ச்சனா இதற்கு என்ன பதில் கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….