Raja Rani 2 Today Episode | 08.03.2022 | Vijaytv
Raja Rani 2. 08.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் எப்படியாவது சந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்று நினைத்து உடனே சிவகாமி இடம் பேச முடிவு எடுத்தார். வீட்டில் அனைவரும் பூஜை அறை யில் இருக்கும்போது இதுதான் சரியான நேரம் என்று சரவணன் பேச ஆரம்பித்தார். சந்தியா அப்பா அம்மாவை தான் தான் கடைசியாக பார்த்தது என்றும் அவர் கையில் இருந்த பேனாவை தான் தான் வைத்து இருந்ததாகவும் கூறினார். பின் சந்தியா சின்ன வயதில் இருந்து தான் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று லட்சியத்தோடு இருப்பதாக கூறினார். ஆனால் இந்த குடும்பத்துக்காக, நமக்காக அவர் கணவை மூட்டை கட்டிட்டு வீட்டு வேலைகளை பார்க்கிறார் என்றார். சரவணன் பேசும் அனைத்தையும் பொறுமையாக சிவகாமி கேட்ட பின், இனி இந்த பேச்சு வரவே கூடாது என்றார். இந்த வீட்டு மருமகள் போலீஸ் ஆவது எனக்கு விருப்பம் இல்லை. என் மகனை விட என் மருமகள் ஒரு படி கீழே தான் இருக்க வேண்டும் என்று கூறினார். சந்தியா மீது சிவகாமி கடிந்து கொண்டார். அதனால் இந்த விஷயம் சந்தியாவுக்கு தெரியாது எனவும் சரவணன் கூறினார். ஆனால் சிவகாமி என் காதில் போலீஸ் என்ற வார்த்தை கேட்க கூடாது என்றார். இதுதான் என் முடிவு என்றார். ஆனால் செந்தில், ரவி மற்றும் பார்வதி அனைவருமே மீண்டும் அம்மாவிடம் பேசி பார்க்கலாம் கண்டிப்பாக சந்தியா திறமை வீணாகாது என்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…