ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அவர் கையில் இருந்த குண்டை எப்படியோ மக்கள் இல்லாத இடத்தில் தூக்கி எரிந்து அந்த ஊரையே காப்பாற்றினார். இதனால் ஊரே அவரை பார்த்து கை எடுத்து கும்பிட்டு நன்றி சொன்னது. சிவகாமிக்கு தன் மகன் திரும்பி வந்த பின் தான் அவருக்கு உயிரே வந்தது. பின் போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சரவணன் மற்றும் சந்தியாவை பாராட்டி தள்ளினார்கள். காலையில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி செய்ய வேண்டிய அனைத்து வேலையும் சந்தியா செய்து பார்வதியை கண்டு பிடித்தார். மேலும் சக்கரை மேல் தான் மற்றொரு குண்டு இருக்கிறது என்பதையும் சந்தியா கண்டு பிடித்து உடனே செயல் பட்டதால் தான் இவளோ பெரிய இழப்பை தடுக்க முடிந்தது என்று கூறினார்கள். சரவணன் இவளோ துணிச்சலாக குண்டை எரிந்து மக்களை காப்பாற்றியதையும் பாராட்டினார்கள். மேலும் கமிஷனர் அவரது தொப்பியை எடுத்து சந்தியா தலையில் வைத்து அவருக்கு மரியாதை செலுத்தினார். ஆனால் அதை பார்த்த சிவகாமி கோவம் கொண்டார். மேலும் அதை கழட்டி போலீஸ் கையில் கொடுத்து அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள். பார்வதி மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டிருந்தார். அவரை பார்த்து பாஸ்கர் கண் கலங்கினார். மேலும் பார்வதியின் மாமியார் விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு வந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…