Raja Rani 2 Today Episode | 08.10.2021 | Vijaytv
Rajarani2.08.10.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் வண்டி வாங்க கடைக்கு சென்றனர். அந்த கடையை தான் இதுவரை பார்த்ததே இல்லை என கூறினார் சரவணன். பின் இருவரும் வண்டிகள் அனைத்தையும் பார்த்து ஒரு வண்டியை வாங்குவதற்கு தீர்மானித்தனர். பின் அதை எடுத்து செல்ல ஆதியை அழைத்து வரலாம் என்றார் சரவணன். அதற்கு வேண்டாம் நாமலே வண்டியை எடுத்து செல்வோம் என்று சந்தியா கூறினார். வண்டி ஓட்ட தெரியாது என கூறினார் சரவணன். பின் சந்தியா தானே ஓட்டுவதாக கூறினார். முதலில் பயந்த சரவணன் பின் சந்தியா ஓட்டுவதை பார்த்து ஆச்சரியப்பட்டார். இடையில் சிவகாமி இருப்பதை பார்த்து வேறு பாதையில் சுற்றி திரிந்தனர். இதற்கிடையில் பார்வதிக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருப்பதாக கூறினார் பாஸ்கர். அது என்னவாக இருக்கும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….