Raja Rani 2 Today Episode | 09.03.2022 | Vijaytv
Raja Rani 2. 09.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மீண்டும் தன் அம்மாவிடம் பேசி பார்க்கலாம் என்று முன் வந்தார். ஆனால் சரவணன் பேசுவதை சிவகாமி கண்டுகொள்ளவே இல்லை. சந்தியாவின் இலட்சியத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தார். சிவகாமி இதை பற்றி தனியாக இருக்கும்போது யோசித்தார். சந்தியாவை பொண்ணு பார்க்க சென்ற நேரத்தில் இருந்து அடுத்து அடுத்து நடந்த அத்தனையும் நினைத்து பார்த்தார். கடைசியில் சாந்தியாவே இந்த குடும்ப நிலையை நினைத்து அவர் லட்சியத்தை மறந்து தான் இருக்கிறாள். ஆனால் சரவணன் அவள் மீது உள்ள காதல், பாசதால் தான் அவளை போலீஸ் ஆக்குவேன் என்று உறுதியாக இருக்கிறான் என்பதை உணர்ந்தார். ஆனால் சந்தியாவால் இது வரை குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை என்று உறுதியாக இருந்தார். இதனால் சந்தியாவிடம் இதை நேரடியாக பேசி இந்த கனவு லட்சியம் எல்லாம் தனக்கு எதும் இல்லை என்று சரவணன் இடம் அவளையே கூற வைக்கலாம் என்று முடிவு எடுத்தார் சிவகாமி. அதனால் உடனே கோவிலுக்கு இலம்பினார் சிவகாமி. கூடவே சந்தியாவையும் அழைத்தார். சரவணன் தன் கடையிலும் சந்தியாவை எப்படி போலீஸ் ஆக்குவது என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். கடைக்கு வருபவர்களில் ஒருவர் தன் மனைவிக்காக அவர் கணவுக்காக என்ன செய்கிறார் என்பது சரவணனுக்கு தெரிய வந்தது. இதனால் அடுத்து என்ன செய்ய முடிவு எடுத்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…