Raja Rani 2 Today Episode | 09.05.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி ரவி இருவரும் நடந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வரவே இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று பேசிக்கொண்டார்கள். சந்தியா இவ்வளவு துணிச்சலாக ஒரு செயலை பார்த்து பார்த்து செய்துள்ளார் என்று ரவி புகழ்ந்தார். மேலும் நம் குலசாமி தான் சந்தியா ரூபத்தில் வந்து உதவி செய்து உள்ளது என்று சிவகாமி கூறினார். ஆள் ஆளுக்கு சந்தியாவை புகழ்ந்து பேசினார்கள். அதை கேட்ட அர்ச்சனா எரிச்சலில் இருந்தார். தன் தங்கை பிரியாவுக்கு முடிய வேண்டியதை தட்டி பறித்துவிட்டாரே என்று மேலும் சந்தியா மீது கோவம் கொண்டார். வீட்டுக்கு அனைவரும் திரும்பியதும் பார்வதி இல்லாமல் வீடு வெறிச்சோடி போய் விட்டது என்று பேசினார்கள். மேலும் சந்தியா இவளோ பெரிய விஷயம் நடந்தும் எதையுமே என்னிடம் சொல்லவில்லை என்று கோவம் கொண்டார். மேலும் இனியாவது தன்னிடம் எதுவாக இருந்தாலும் சொல்லவேண்டும் என்று கூறினார். அர்ச்சனாவின் சொல் செயல் எதிலுமே பார்வதி திருமணம் முடிந்தது விருப்பம் இல்லை என்று தெரிந்தது. அதை கவனித்த செந்தில், உன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக மட்டும் தான் நைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் அதை எல்லாம் அர்ச்சனா பொருட்படுத்தவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…