Raja Rani 2 Today Episode | 09.08.2022 | Vijaytv

Raja Rani 2. 09.08.2022

Raja Rani 2. 09.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் ஹால் டிக்கெட்டை வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போனார் சந்தியா. சரவணன் அதை நினைத்து தூக்கம் வராமல் தவித்தார். சரவணன் தூங்காமல் இருப்பதை பார்த்த சிவகாமி அவரிடம் வந்து பேசினார். எதற்காக இணும் தூங்கவில்லை என்று. அதற்கு சரவணன் அந்த ஹால் டிக்கெட் காணாமல் போனதால் தூக்கம் வரவில்லை. இதனால் பெரிய மன உளைச்சள் என்றும் கூறினார். ஆனால் அதை கேட்டும் சிவகாமி தான் எடுத்த விஷயத்தை கூறவில்லை. பின் மீண்டும் சந்தியாவை பார்த்து ஆறுதல் சொன்னார் சரவணன். அடுத்த நாள் ஆதியை பார்க்க ஜெஸ்ஸி வந்து இருந்தார். ஆதி வீட்டுக்கு போகும் வழியில் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். பின் அவசர அவசரமாக ஜேசயை பார்க்க ஆதி வந்து சேர்ந்தார். தன் வீட்டு அருகில் உள்ள ரோடு என்பதால் பதட்டமாக இருந்தார். ஆனால் ஜெஸ்ஸி தன் வீட்டில் யாரும் இல்லை என்பதால் வெளியே செல்லலாம் என்று வந்ததாக கூறினார். ஆனால் ந்தா நேரம் அந்த வழியாக சென்ற அர்ச்சனா பார்த்து விட்டார். மேலும் அவர்கள் அருகில் சென்று யார் அந்த பெண் என்று விசாரித்தார். ஆனால் ஆதி அவர் தனது தோழி என்று கூறினார். ஆனால் அர்ச்சனா உங்களை பார்த்தால் நண்பர்கள் போல் இல்லையே என்று கூறினார். பின் வேறு வலி இல்லாமல் ஆதி உண்மையை ஒத்துக்கொண்டார். இருவரும் காதலிக்கிறோம், ஆனால் அவள் ஒரு கிருத்துவ மதத்தை சேர்ந்தவர் அதனால் அம்மாவிடம் சொல்ல பயமாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் அர்ச்சனா உடனே அவர்களை ஆதரித்து பேசினார். மேலும் காதலுக்கு நான் எதிரி இல்லை, காதலுக்கு ஏது ஜாதி மதம் என்று பல வசங்களை கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author