Raja Rani 2 Today Episode | 10.02.2022 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனாவின் அம்மா அவரது மகள்கள் செய்த அனைத்து பிரச்சனைகளுக்கும் மன்னிப்பு கேட்டார். அர்ச்சனாவை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் செந்தில் இனி அர்ச்சனாவிடம் வாழ விருப்பம் இல்லை என்று கூறினார். சிவகாமியும் இனி அர்ச்சனா இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லை என்றார். அர்ச்சனா வீட்டில் பெரியவர் சிறியவர் என்று அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனாலும் சிவகாமி மற்றும் செந்தில் மனம் மாறவில்லை. இதனால் அர்ச்சனா ஒரு திட்டம் போட்டார். தான் கர்பமாக இருப்பதை சொல்லி இந்த வீட்டில் தங்கிவிடலாம் என்று எண்ணினார். உடனே தன் வயிற்றில் உள்ள குழந்தையை தண்டித்துவிட வேண்டாம் என்று கூறினார். பின் தான் கர்பமாக இருப்பதாக கூறினார். ஆனால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. இந்த வீட்டில் இருப்பதற்காக மீண்டும் பொய் சொல்ல வேண்டாம் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் அர்ச்சனா தன்னை இங்கு அழைத்து டெஸ்ட் எடுக்க வேண்டுமானாலும் வருவதாக தைரியமாக கூறினார். இதனால் மனம் மாறிய சிவகாமி அர்ச்சனாவை வீட்டிற்குள் அழைத்தார். ஆனால் செந்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியாக இந்த குழந்தையை பெத்து எடுப்பது வரை தான் அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிபந்தனைக்கு அர்ச்சனா மற்றும் அவரது பெற்றோரும் ஒத்துகொண்டார்கள். இந்த பதட்டத்தில் அர்ச்சனா தான் கர்பமாகாமல் இருக்க மாத்திரை போட்ட விஷயத்தையும் உளரினார். சிவகாமி சந்தியாவிடம் அவரை தப்பாக நினைத்ததற்கு வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….