Raja Rani 2 Today Episode | 10.06.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா வீட்டில் அனைவரும் குடும்பமாக அமர்ந்து டீ குடித்துக்கொண்டு அரட்டை அடித்தார்கள். அப்போது ரவி அப்பா பேப்பரில் சந்தியா ஃபோட்டோ வந்து இருப்பதை பார்த்தார். சந்தியாவை புகழ்ந்து எழுதி இருந்தார்கள். சந்தியாவால் ஒரு பெரிய பேரிழப்பு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது என்று எழுதி இருந்தது. பின் அதில் சந்தியா ஒரு போலீஸ் அதிகாரி செய்ய வேண்டியதை ஒரு தனி ஆளாக செய்துள்ளார் என்று இருப்பதை ரவி அப்பா படித்து காட்டினார். அதை கேட்டதும் சிவகாமி அம்மாவு எரிச்சல் அடைந்தார். மீண்டும் மீண்டும் சந்தியாவும் அவளது போலீஸ் கனவை நினைவு படுத்துவது போல் எதாவது ஒன்று நடக்கிறதே என்று நினைத்தார். மேலும் அந்த பேப்பரை படிக்க வேண்டாம் என்று கூறினார். சற்று நேரத்தில் வீதி முழுவதும் சரவணன் சந்தியாவின் புகைப்படங்களை போட்டு பாராட்டுகள் குவிந்தது. இதை எல்லாம் பார்த்து சிவகாமி மீண்டும் கோவம் கொண்டார். வெறுப்புடன் நடந்து கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…