Raja Rani 2 Today Episode | 10.08.2022 | Vijaytv

Raja Rani 2. 10.08.2022

Raja Rani 2. 10.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா வீட்டில் உள்ள அனைவரையும் நிற்க வைத்து சந்தியாவை பார்த்து கேள்விகளாக அடுக்கினார். சரவணனுக்கு திருமணம் செய்தது, அவனையும் இந்த குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள மட்டுமே இப்படி போலீஸ் ஆகி ஊருக்கு சேவை செய்ய அல்ல. மேலும் போலீஸ் வேலையில் இரவு பகல் என்று எந்த வித்தியாசமும் இல்லை. எப்படி சாந்தியாவால் சரவணனை பார்த்துக்கொள்ள முடியும். எப்படி அவன் கடையில் ஆள் தேவை படும்போது சமாலிப்பான்? மேலும் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் கூட யாரோ ஒருவர் இடம் கை கட்டி ஒப்புதல் வாங்கி பின் விடுமுறை கிடைக்கும். இதெல்லாம் நல்ல குடும்பத்துக்கு அழகு இல்லை. பிற்காலத்தில் இவர்களின் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது? அந்த குழந்தைகளை பார்க்கவாவது இவள் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதெல்லாம் நாங்கள் சமாளித்துவிடுவோம் என்று கூறினார். இது போக செந்தில், ரவி, மயிலு என்று ஆள் ஆளுக்கு சிவகாமி அம்மாவை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. மேலும் அர்ச்சனா மற்றும் ஆதி மீண்டும் சிவகாமியை தூண்டி விட்டார்கள். அதுவும் அர்ச்சனா சந்தியா போலீஸ் ஆகவே தான் இன்னும் குழந்தையை தள்ளி போடுகிறார் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author