Raja Rani 2 Today Episode | 10.12.2021 | Vijaytv
rajarani2.10.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டியில் அடுத்ததாக வித்தியாசமாக ஒரு போட்டி வைத்தார்கள். செய்து வைத்து இருந்த சப்பாட்டை சாப்பிட்டு பார்த்து அதில் என்ன பொருட்கள் சேர்த்து சமைத்து உள்ளார்கள் என்பதை கண்டு பிடிக்க சொன்னார்கள். சரவணன் அதை கேட்டதும் பதட்டம் அடைந்தார். பின் போட்டியும் ஆரம்பித்தார்கள். அந்த சாப்பாட்டை திறந்தால் பாஸ்தா செய்து வைத்து இருந்தார்கள். ஆனால் சரவணன் அந்த சாப்பாடு என்னவென்றே தெரிாமல் திகைத்தார். பின் சாப்பிட்டு பார்த்து தன்னால் முடிந்த பொருட்களை கண்டு பிடித்தார். போட்டியும் முடிந்தது. 5 நபர்களை அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றார்கள். ஆனால் சரவணன் வெறும் 14 பொருட்களே கண்டு பிடித்ததால் அவர் மீண்டும் ஒரு போட்டியில் கலந்துகொண்டு தான் தகுதி ஆக முடியும் என்று கூறினார்கள். சிவகாமி இவை அனைத்தையும் பார்த்து கோபம்கொண்டார். சந்தியாவால் தான் தன் மகன் அனைவர் முன்னிலையிலும் அசிங்கபட்டதாக கூறினார். அர்ச்சனா மற்றும் ஆதி, சரவணனை மீண்டும் காயபடுத்தும்படி பேசினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…