ராஜா ராணி தொடரில் இன்று, செந்தில் மற்றும் அர்ச்சனா அவர்களது வியாபாரம் இன்று கொஞ்சம் கம்மிதான் ஆனால் பரவாயில்லை நல்ல கல்லா கட்டியது என்று பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். அப்போது சரவணன் கடையில் என்ன செய்தோம் என்று அவரிடம் சொல்லிக்கொள்ள வேண்டாம். அப்படியே எஸ்கேப் ஆகிடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டு வந்தார்கள். சரவணன் அவர்களை வழி மரித்து பேசினார். தன் வியாபாரம் நடக்கவே இல்லை. பெரும் நஷ்டம். சரக்கு மட்டும் காலி ஆகிவிட்டது ஆனால் கள்ளாவில் காசு இல்லை என்று கூறினார். பின் இருவரையும் கண்டித்தார். சொந்த வீட்டில் இருப்பவருக்கு துரோகம் செய்ய முடிவு செய்துவிட்டீர்களா என்று கேட்டார். பின் யாரிடமும் இதை பற்றி கூற வேண்டாம் என்று மன்னித்து விட்டார். இதனால் குற்ற உணர்ச்சியில் இருந்த செந்தில் வீட்டு செலவுக்கு சிவகாமியிடம் பணம் கொடுத்தார். அதுவும் இரண்டு மாதத்திற்கு சேத்து கொடுத்தார். இதனால் ஆச்சரியப்பட்டார் சிவகாமி. பின் இரவு அனைவரும் சேர்ந்து சாப்பிடும்போது சரவணன் தன்னிடம் பணம் இல்லை அதனால் நாளை செலவுக்கு பணம் தருவதாக செல்ல தயங்கி தயங்கி பேசினார். பின் சிவகாமி அது பிரச்சனை இல்லை செந்தில் இரண்டு மாதத்திற்கு பணம் கொடுத்துவிட்டான் என்று கூறினார். இதை கேட்ட அர்ச்சனா கோவம் கொண்டார்.அடுத்து என்ன நடந்தது? குடும்பத்தில் மற்றவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்? காணொளியை பார்க்க…