Raja Rani 2 Today Episode | 11.04.2022 | Vijaytv
Raja Rani 2. 11.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி அவரது படிப்பை முடித்து பாஸ் ஆனவுடன் திருமண பேச்சுக்கள் ஆரம்பம் ஆனது. அடுத்த நாளே பாஸ்கர் வீட்டில் இருந்து திருமணம் பற்றி பேச வந்தார்கள். இரு வீட்டாரும் கோவிலில் சந்தித்து திருமணம் பற்றி பேசினார்கள். அடுத்த மாதம் உள்ள நல்ல முகிர்த்ததில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்கள். இந்த பேச்சு வார்த்தை நடக்கும் போதே விக்கி பார்வதிக்கு அழைத்து பேசினார். மிரட்டும் தோரணையில் அங்கு வந்து பிரச்சனை செய்ய போவதாக பேசினார். பார்வதி அதை கேட்டதும் பதட்டம் ஆனார். இங்கு பார்வதி திருமணத்தை நடத்த முடிவு எடுக்கும் அதே சமயம் அர்ச்சனா அவரது தங்கை பிரியாவை பாஸ்கருக்கு திருமணம் முடிக்க திட்டம் போட்டார். பாஸ்கர் மற்றும் பார்வதி இருவரும் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது விக்கி பார்வதிக்கு அழைத்து மீண்டும் மிரட்டினார். தன்னுடன் ஒரு நாள் வாழ்ந்தால் இனி எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன் என்று கூறினார். இதை கேட்ட பார்வதி பதட்டம் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…