Raja Rani 2 Today Episode | 11.08.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நாளை தன் மாமியார் என்ன முடிவு எடுப்பார் என்று பதறினார். ஆனால் சரவணன் தனக்கு பதட்டம் இருந்தாலும் நாளை கண்டிப்பாக அம்மா அனுமதி கொடுப்பார் என்று நம்பிக்கை கொடுத்தார். மேலும் அர்ச்சனா இப்போதுதான் தனக்கு நிம்மதியாக இருப்பதாக கூறினார். கண்டிப்பாக நாளை சிவகாமி அம்மா சந்தியாவின் படிப்பு நிறுத்திவிட்டு அவளை போலீஸ் ஆக வேண்டாம் குடும்பத்தை பார்க்கும்படி தான் கூறுவார் என்று கூறினார். ஆனால் செந்தில் அம்மாவின் மனம் கண்டிப்பாக மாறும். சந்தியா அண்ணி எப்படியும் போலீஸ் ஆகி விடுவார் என்று கூறினார். மேலும் அவர் போலீஸ் ஆவதால் உனக்கு என்ன பிரச்சனை என்றும் கேட்டார். மேலும் அடுத்த நாள் காலையில் எழுந்ததும் அனைவரும் சிவகாமியின் முடிவை கேட்க கத்து இருந்தார்கள். சிவகாமியும் பூஜை எல்லாம் செய்து முடித்ததும் அவர் மறைத்து வைத்து இருந்த ஹால் டிக்கெட்டை எடுத்து சந்தியாவிடம் கொடுத்தார். மேலும் அவர் போலீஸ் ஆவதில் தனக்கு சம்மதம் என்றும் கூறினார். இதை கேட்ட அனைவரும் நிம்மதி அடைந்தார்கள் அர்ச்சனாவை தவிர. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…