Raja Rani 2 Today Episode | 12.01.2022 | Vijaytv
Raja Rani 2.12.01.2022
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் வீட்டில் உள்ளவர்கள் இப்படி துரோகம் செய்து விட்டார்கள் என்று மனதுக்கு உள்ளே தவித்தார். அம்மாவிடம் செலவுக்கு பணம் கொடுக்கவும் இல்லையே என்று வருந்தினார்.ஆனால் சந்தியா கேட்டதற்கு வேறு எதேதோ பேசி சமாளித்தார்.அர்ச்சனா வீட்டு செலவுக்கு எதற்கு 40000 ரூபாய் கொடுத்தார் என்று எரிச்சலில் இருந்தார். செந்தில் வந்த உடன் திட்ட ஆரம்பித்தார். யாரை கேட்டு இவ்வளவு பணத்தையும் அள்ளி கொடுத்தீர்கள் என்று கொந்தலித்தார். செந்தில் நாம் செய்தது பெரிய கேவலமான ஒரு விஷயம் அதையும் மன்னித்து சரவணன் பெருந்தன்மையாக உள்ளான். அதனால் அமைதியாக இருக்கும்படி கூறினார். அவன் வியாபாரத்தையும் கெடுத்து வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். பின் அர்ச்சனாவும் அமைதி ஆனார்.அடுத்த நாள் ஹென்னா சரவணன் வீட்டுக்கு வந்தார். அவர் கூடவே சல்மாவையும் அழைத்து வந்து இருந்தார். இதனால் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் பார்த்தார்கள். பின் அவர்களுக்கு சாப்பாடு வைத்து உபசரித்தார்கள்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….