ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனுக்கு வண்டி ஓட்ட கத்து தருகிறார் சந்தியா. தினமும் காலை நேரம் யாரும் எந்திரிப்பதற்கு முன்பே கிளம்பி வண்டி ஓட்ட சென்று பயிற்சி செய்தனர். பார்வதியை சிவகாமி வீட்டில் வேலைகளை செய்து பழகுமாறு கூறினார். சாப்பாடு பரிமாறுவதில் இருந்து அனைத்தையும் பழக்கமாக்க கூறினார். பார்வதியும் அதை ஏற்றுக்கொண்டார். பின் சற்று நேரத்தில் பாஸ்கர் தொலைபேசிக்கு அழைத்து கடன் பிரச்சனை எப்படி தீர்ந்தது என கேட்டார். அதற்கு அவரும் என் நண்பன் ஒருவர் தந்து உதவினார் என கூறினார். பின் விக்கி தான் உதவினார் எனவும் கூறினார். அதை கேட்டதும் அதிர்ச்சியில் தொலைபேசியை துண்டித்தார். பின் கோவத்தில் அவர் வாங்கி தந்த மோதிரத்தை தூக்கி எறிந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….