Raja Rani 2 Today Episode | 12.12.2022 | Vijaytv
Raja Rani 2. 12.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, செந்தில் இனி குடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தார். அதனால் சிவகாமி இனி நான் நிம்மதியாக இருக்கலாம் என்று ரவி அப்பாவிடம் கூறினார். பின் சரவணன் சந்தியாவுக்கு நடக்கப்போகும் முக்கியமான போட்டி என்று கூறினார். இதில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக அந்த கோப்பை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். ஆனாலும் இதில் பெரிய அளவில் ஆபத்து இருப்பதை சரவணன் மறைத்து விட்டார். சிவகாமி, ரவி மற்றும் சரவணன் மூவரும் கோவிலுக்கு வந்து சந்தியா பெயரில் அர்ச்சனை செய்தார். எப்படியாவது இந்த போட்டியில் சந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டினார். மேலும் சந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன். மேலும் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று விரதம் இருந்தார். அதை பார்த்த ஊர் மக்கள் இப்படி ஒரு மாமியாரா? எப்படி ஒரு மருமகளுக்காக இவளோ மெனக்கெட்டு செய்கிறாரே என்று பார்த்து ஆச்சர்யபட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….