Raja Rani 2 Today Episode | 13.04.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கைக்கு திருமணம் செய்ய நினைத்த பாஸ்கர் வீட்டில் இனி பிரியாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்ததும் பார்வதிக்கும் திருமணம் நடக்க கூடாது என்று முடிவு செய்தார். உடனே விக்கிக்கு அழைத்து பேசினார். பார்வதி உடன் விக்கி எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தேடி எடுத்து விட்டேன் என்று கூறினார். உடனே உனக்கு அனுப்புகிறேன், ஆனால் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு விக்கியும் உடனே வேலையை ஆரம்பித்தார். பார்வதிக்கு அந்த புகைப்படங்களை அனுப்பி மிரட்ட ஆரம்பித்தார். பார்வதி என்ன செய்வது என்று தெரியாமல் சந்தியாவிடம் பதட்டமாக கூறினார். சந்தியா அந்த புகைப்படங்களை பார்த்து இதில் எதுவும் தவறாக இல்லை, இது வெறும் சாதாரண புகைப்படம் தான் என்று கூறினார். மேலும் இதை பார்த்து பயப்பட வேண்டாம் என்றும் கூறினார். சரவணன் இடம் இதை பற்றி கூறலாம் என்று நினைத்தார். ஆனால் பார்வதி அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம், இதனால் அண்ணனுக்கு எதாவது பிரச்சனை வந்து விடும் என்று பயந்தார். சிவகாமி காய் கறி வாங்க வந்த இடத்தில் சந்தியா உண்டாகி உள்ளரா என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? சிவகாமி அதற்கு என்ன பதில் அளித்தார்? காணொளியை பார்க்க…