Raja Rani 2 Today Episode | 13.06.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை பற்றி அர்ச்சனா கூறியதை நினைத்து வருந்தினார். கோபம் கொண்டார். வீட்டில் இவளோ பெரிய விஷயம் நடந்தும் அவளுக்கு என்னை எதாவது சொல்வதில் தான் குறியாக இருக்கிறாள். இன்னும் திருந்தவே இல்லை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார். பின் சிவகாமி சந்தியாவிடம் தனியாக வந்து பேசினார். இந்த வீட்டுக்கு நீ வந்த நாளில் இருந்து எந்த பிரச்சனை வந்தாலும் அதை எப்படி சரி செய்வது என்று போராடி இந்த குடும்பத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்றி வழி நடத்துகிராய். உன் புத்திசாலித்தனம் இதில் வேலை செய்வது எனக்கு சந்தோசம். ஆனால் அது இந்த வீட்டுக்கு மட்டுமே இருக்க வேண்டும். இன்று வெளியில் பாராட்டும் 4 பேர் நாளை நீ எதோ ஒரு தப்பு செய்தால் காலில் போட்டு மிதிக்கும். அந்த வீண் வேலை நமக்கு தேவை இல்லை. நீ இந்த வீட்டுக்கு மஹாலக்ஷ்மியாக இருந்தால் போதும். இந்த ஊருக்கு தைரியலட்சுமியாக இருக்க வேண்டாம் என்று கூறினார். நான் சொல்வது உனக்கு கண்டிப்பாக புரியும் என்று மறைமுகமாக நீ போலீஸ் ஆக வேண்டாம் என்று கூறினார். அதை கேட்டு சந்தியாவும் என்ன செய்வது என்று புரியாமல் நின்றார். அடுத்த கொஞ்ச நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சில போலீஸ்காரர்கள் சந்தியாவை தேடி வீட்டுக்கு வந்தார்கள். வந்ததும் சரவணன் உடல் நிலை, பார்வதியின் மனநிலை என விசாரித்தார்கள். பின் சந்தியாவுக்கு ஒரு பெரிய பாராட்டு விழா ஏற்பாடு செய்து உள்ளதாக கூறினார்கள். மேலும் அதில் சரவணனுக்கும் பங்கு உண்டு, அவரையும் கௌரவிக்க வேண்டும் என்று கூறினார்கள். குடும்பத்தோடு இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இதில் சிவகாமிக்கு சற்றும் விருப்பம் இல்லை. ஆனால் சரவணன் உடனே கண்டிப்பாக வருவோம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…