Raja Rani 2 Today Episode | 14.03.2022 | Vijaytv
Raja Rani 2. 14.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் அப்பா அம்மா படத்தை பார்த்து மனசுக்குள் ஆயிரம் எண்ணங்களோடு இருந்தார். அந்நேரம் சிவகாமி அவர் அறைக்கு வந்து பார்த்தார். பின் இறந்தவர்கள் படத்தை இப்படி புருஷன் பொண்டாட்டி வாழும் அறையில் வைக்க கூடாது, அதனால் இதை நான் உள்ளே வைத்து விடுகிறேன் என்றார். பின் தான் கோவிலில் சொன்ன விஷயம் பற்றி யோசித்து நடக்கும்படி கூறினார். இதை எல்லாம் யோசித்த சந்தியா, தன் கனவை பற்றி யோசிக்கவே முடியாது என்று நினைத்தார். இரவு சாப்பாடு சாப்பிடும் போது கூட, சந்தியாவை புகழ்ந்து பேசினார் சிவகாமி. சந்தியா செய்த சப்பாத்தி மிகவும் மெருதுவாக இருந்தது எனவும், அந்தியா வீட்டு வேலைகளையும், வீட்டு பொறுப்புகளையும் அருமையாக கத்துக்கொண்டார் எனவும் அவரை புகழ்ந்து தள்ளினார். ஆனால் இது அனைத்தும் சந்தியாவை அவரது கனவாக போலீஸ் அதிகாரி ஆவதை நிறுத்தவே திட்டம் போட்டு பேசினார். இதனை கவனித்த குடும்பத்தார் எதற்காக சிவகாமி இப்படி பேசுகிறார் என்று புரியாமல் இருந்தார்கள். பின் இரவு தூங்க போகும் நேரம், சந்தியா தலை நிறைய மல்லிகை பூ வைத்து சரவணன் வருகைக்காக காத்திருந்தார். அவர் வந்ததும், திருமணம் ஆகி இதனை மாசம் ஆகியும் புருஷன் பொண்டாட்டியாக இன்னும் வாழவே இல்லையே என்று கூறினார். பின் இந்த குடும்பத்துக்காக நான் ஒரு குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதை கேட்டதும் சரவணன் அதிர்ச்சியில் நின்றார். திடீர் என்று எப்படி இந்த ஆசை வந்தது என்று கேட்டார். ஆனால் சந்தியா தானும் ஒரு மனைவியாக இந்த கடமையும் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் சரவணன் சந்தியாவின் போலீஸ் கனவை நிறைவேற்றுவதே அவரின் முதல் வேலை என்று கூறினார். பின் கோவமாக வெளியே கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….