Raja Rani 2 Today Episode | 14.09.2022 | Vijaytv
Raja Rani 2. 14.09.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி வீட்டில் பேசி முடித்ததை பற்றி வீட்டில் அனைவரும் பேசினார்கள். சிவகாமியின் மாமியார் ஊருக்கு கிளம்புவதவா கூறினார். போகும் நேரத்தில் ஆதி திருமணத்துக்கு பின் அந்த வீட்டோடு சாய்ந்து வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடாமல் இருக்க நீதான் கவனமாக இருக்க வேண்டும் என்று சிவகாமிக்கு எச்சரித்தார். பின் இந்த போலீஸ் வேலைக்கு சந்தியா போவதை எனக்கு சரியாக படவில்லை. இருந்தாலும் நீ யோசித்து முடிவு எடு என்றார். பின் இந்த போலீஸ் வேலை கிடைத்தால் கண்டிப்பாக இந்த ஊரில் வேலை இருக்காது வேறு மாநிலத்தில் போடுவார்கள் என்று கேள்விப்பட்டேன் அதையும் கவனித்துக்கொள். பின் சந்தியா போனால் பின்னாடியே சரவணன் பொய் தனி குடித்தனம் ஆகி விடும் என்று எச்சரித்தார். பின் ஊருக்கு கிளம்பினார். ஜெஸ்ஸி அப்பா ஆங்கிலத்தில் பேசியதை பார்த்து ரவி அப்பாவுக்கும் பேச ஆசை வந்தது. உடனே ஆதி இடம் அவர் பேச முயற்சி செய்தார். ஆனால் அதை கேவலமாக சிரித்து அவரை அசிங்க படுத்தினான் ஆதி. மேலும் இதெல்லாம் முயற்சி செய்து என் மரியாதையை கெடுக்க வேண்டாம் என்று கூறினார். இதனால் ரவி அப்பா மிகவும் மனம் உடைந்து போனார். பின் தனக்கும் ஒரு ஃபோன் வாங்கி தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு அவரை அவமான படுத்தும் விதமாக ஆதி பேசி கிளம்பினான். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…