ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சிவகாமியை வண்டியில் உக்கார வைத்து ஒட்டிகாட்டினார். அதை நினைத்து சிவகாமி மிகவும் சந்தோஷம் அடைந்தார். அன்று இரவு ஆதி அந்த வண்டியை எதாவது செய்ய வேண்டும் என்று ஒரு கல்லை எடுத்து வண்டியை உடைக்க பார்த்தான். ஆனால் அந்த சமயம் பார்வதியை பார்த்ததால் நிறுத்திவிட்டான் . ஆனால் பார்வதிக்கு அவன் மீது ஒரு சந்தேகம் வந்தது. பின் அவனிடம் அண்ணன் அண்ணியை வெறுக்க வேண்டாம் அவர்கள் நல்லவர்கள் என அறிவுரை கூறிசென்றார். பின் சரவணனுக்கு சாலை விதிமுறைகள், லைசென்ஸ் எடுப்பதற்கு தேவையானவை அனைத்தையும் சந்தியா சரவணனுக்கு சொல்லி கொடுத்தார். காலையில் லைசென்ஸ் உரிமம் பெற பரிட்சைக்கு செல்ல தயார் ஆனார் சரவணன். அபொழுதும் ஆதி சரவணனை கேலி செய்தார். அண்ணி சொல்லி கொடுத்து நீ லைசென்ஸ் வாங்க முடியாது என்றார். ஆனால் அதற்கு சந்தியா ஆதி மூக்கை உடைக்கும்படி ஒரு பதில் கூறினார். அப்படி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…