Raja Rani 2 Today Episode | 14.11.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி, ஆதி மற்றும் செந்தில் அர்ச்சனா நால்வரும் ரோட்டில் நின்று சண்டை போட்டதை நினைத்து ரவி அப்பா மற்றும் சிவகாமி வருத்தமாக இருந்தார்கள். தன் பிள்ளைகள் ரோட்டில் சண்டை போடும் அளவுக்கு இந்த குடும்ப நிலை வந்து விட்டதே என்று புலம்பினார். சரவணன் கோவத்தில் அனைவரையும் அழைத்து எப்படி இந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கி வீதியில் நின்று சண்டை போட எப்படி தைரியம் வந்தது என்று திட்டினார். இது போல் சண்டை போட்டால் நம் குடும்ப மானம் கௌரவம் என்னவாகும் என்று கேட்டார். உடனே செந்தில் மற்றும் ஆதியை பெற்றோர்கள் இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். செந்தில், அர்ச்சனா மற்றும் ஜெஸ்ஸி அனைவரும் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் ஆதி மட்டும் திமிராகவே பேசினார். அடுத்து அவரும் மன்னிப்பு கேட்க வேண்டுமே என்று கடமைக்கு கேட்டார். பின் அர்ச்சனா இந்த கடை யாருக்கு சொந்தம் என்று கேட்டார். சிவகாமி இந்த கடை ஜெஸ்ஸிக்கு கொடுப்பது தன ஞாயம் என்று கூறினார். அதற்கு அர்ச்சனா அது எப்படி இந்த கடையை ஒரு திருடனுக்கு கொடுக்கலாம் என்று கேட்டார். ஜெஸ்ஸிக்கு ஆதி சொந்த வீட்டில் திருடியது தெரிய வேண்டாம் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் நினைத்தார்கள். ஆனால் அர்ச்சனா விடமால் உண்மையை போட்டு உடைத்தார். ஜெஸ்ஸி மனம் உடைந்து போனார். ஆதி தான் செய்த தவறுதான் ஆனால் அதை ஜெஸ்ஸிக்காக தன் செய்தேன் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….