Raja Rani 2 Today Episode | 15.04.2022 | Vijaytv
Raja Rani 2. 15.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பார்வதியின் நிலையை நினைத்து வருந்தினார். எப்படி திருமணத்தை வைத்துக்கொண்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று நினைத்தார். பின் அதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த நேரம் சரவணன் அந்த வழியாக வந்தார். சரவணன் என்ன யோசனை என்று கேட்டதற்கு, சந்தியா பார்வதிக்கு சமீப காலமாக நடக்கும் விஷயங்களை கூறினார். விக்கி போட்டோக்களை வைத்து மிரட்டுவது, பாஸ்கர் உடன் நண்பன் போல் நடிப்பது என்று அனைத்தையும் கூறினார். இதை கேட்டு சரவணன் ஆத்திரம் அடைந்தனர். ஆனால் சந்தியா வேறு ஒரு திட்டம் பிட்டு கொடுத்தார். அதே நேரம் பார்வதிக்கு விக்கி அழைத்தான். அதை பார்த்து சந்தியா சொன்னது போல் பயம் இல்லாமல் தைரியமாக எடுத்து பேசினார். பின் விக்கி மிரட்டியதற்கு பயம் இல்லாமல் தைரியமாக பேசினார். உன்னால முடிந்ததை செய் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்கி எதாவது செய்து இந்த திருமணத்தை நிருத்துவேன் என்று கூறினார். பின் உடனே பாஸ்கருக்கு அழைத்து காலையில் பார்க்க வருமாறு கூறினார். பாஸ்கரும் வந்ததும் பார்வதி தவறான பெண் என்று சித்தரித்து கூறினார். தன்னிடம் தவறாக நடந்துகொள்வதாக கூறினார். இதை எல்லாம் கேட்ட பாஸ்கர், ஓங்கி ஒரு அறை விட்டார். இனி பார்வதியை பற்றி தவறாக பேசினால் மரியாதை இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்தார். ஏற்கனவே சரவணன் பாஸ்கரை அழைத்து நடந்த அனைத்து உண்மையும் சொல்லி முடிவை அவரே எடுக்கும்படி சொல்லி இருந்தார். இதனால் விக்கி பற்றிய விஷயம் தெரிந்து பாஸ்கர் புரிந்து நடந்ததுகொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…