Raja Rani 2 Today Episode | 15.11.2021 | Vijaytv
Rajarani2.15.11.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சரவணன் சிவகாமி ரவி அனைவரும் விமானத்தில் பயணம் செய்வதை நினைத்து மிகவும் வருந்தினார் அர்ச்சனா. தன்னால் போக முடியவில்லையே என்று நினைப்பதை விட சந்தியா சரவணன் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தார் அர்ச்சனா. ஆனால் அவர் செல்லும் இடமெல்லாம் விமானம் பயணம் போன்ற வார்த்தைகளை கேட்க கேட்க மீண்டும் வெறுப்பு அதிகம் ஆனது. விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் ஒருவருக்கு குறைந்தது 3500 ஆகும் என்று சொல்லவும், செந்தில் அழைத்து செல்ல மாட்டார் என முடிவு செய்தார் அர்ச்சனா. எப்படியாவது இவர்களை போக விடாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். சரவணன் மளிகை பொருட்களுக்கு சில ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொள்ள நினைத்தார் . அதற்கு சந்தியா பாடம் எடுத்து உதவினார். சிவகாமி சந்தியாவிடம் தனியாக பேசினார். என்ன பேசினார்கள்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..