Raja Rani 2 Today Episode | 15.12.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஃபோனில் பேசி அவர்களின் காதலை வெளிப்படுத்தினார்கள். என்னதான் பேசினாலும் சரவணன் தன் அருகில் இல்லையே என்று சந்தியாவுக்கு வருத்தம் இருந்தது. இதனால் சரவணன் உடனே வீட்டில் சொல்லிவிட்டு சந்தியாவை பார்க்க கிளம்பினார். சிவகாமி அம்மாவுக்கு ஜெஸ்ஸி அவருக்கு பிடித்த சமையலை செய்து கொடுத்து அசத்தினார். ஆனால் இதை பார்த்து அர்ச்சனா மேலும் ஜெஸ்ஸி சிவகாமிக்கு இது போல் எதாவது செய்து கொடுத்து காரியத்தை சாதிக்கிறார் என்று நினைத்தார். அடுத்த நாள் காலையில் சந்தியா அறைக்கே சரவணன் சென்றார். அங்கு அவரை பார்த்ததும் சந்தியா எதோ கனவில் தோன்றி இருக்கிறார் என்று நினைத்தார். கடைசியில் உண்மையில் அவரை பார்த்த சந்தியா அவரை கட்டி அணைத்து அழுதார். பின் இருவரும் அவர்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள் . அதே நேரம் சிவகாமி வீட்டுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார் பக்கத்து வீட்டு பெண். தன் பேத்தி பிறந்த நேரம் தனக்கு குழுக்கள் முறையில் 4 லட்சம் பரிசு விழுந்து இருப்பதாக கூறினார். மேலும் இதனை வருடம் இழுத்து அடித்த ஒரு சொத்து பிரச்சனையும் தீர்ந்தது. இவள் ஜாதகப்படி செல்வம் கொட்டி கிடைக்குமாம் என்று கூறினார். அதை கேட்டதும் அர்ச்சனா தன் குழந்தையை இப்படி அடுத்தவர் இடம் கொடுத்து விட்டோமே என்று வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author