Raja Rani 2 Today Episode | 16.02.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று,சந்தியா தான் இன்றைக்கு சமையல் செய்தால் என்று வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டார்கள். சாப்பிடவும் தயார் ஆனார்கள். சப்பாத்தி மிகவும் மெருதுவாக இருப்பதாக பாராட்டினார்கள். ஆனால் குருமாவை வாயில் வைததும் உப்பு கைத்தது. சிவகாமி சந்தியா மீது கோவம் கொண்டார். தனக்கு தெரியவில்லை என்றால் ஒதுங்கி இருக்க வேண்டியது தானே எதற்கு இந்த சாப்பாடை வீணாக்க வேண்டும் என்று திட்டினார். சந்தியா தான் சாப்பிடும்போது உப்பு இவளோ இல்லையே என்று கூறினார். ஆனால் சிவகாமி, உன்னை புகழ்ந்து பேசவும் உனக்கு கால் தரையில் இல்லை, காசு பணம் வந்ததும் ஆளே மாறிவிட கூடாது என்று கூறினார். பின் அவரே சமைக்கவும் செய்தார். சந்தியா சரவணன் இடம் தான் உப்பை இவளோ போடவே இல்லை என்று கூறினார். சரவணன் இதை பற்றி பேச வேண்டாம் என்றார். செந்திலுக்கு அர்ச்சனா மீது தான் சந்தேகம். அவரை விசாரித்தார். இந்த மாதிரியான சில்லறை வேலைகளை நீதான் செய்து இருப்பாய் இது உண வேலை தானே என்று கேட்டார். ஆனால் அர்ச்சனா தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். இந்த வீட்டில் எது நடந்தாலும் நான்தான் காரணமா என்று கேட்டார் அர்ச்சனா. ஆனாலும் செந்திலுக்கு அர்ச்சனா மீது இருந்த சந்தேகம் தீரவில்லை. அவர் தன செய்து இருப்பர் என்று நம்பினர். அடுத்த நாள் காலையில் வாசல் தெளித்து கோலம் போட்ட சிவகாமியை பார்த்த பக்கத்து வீட்டு பெண் ஒருவர், இரண்டு மருமகளை வைத்துக்கொண்டு நீ எதற்காக இந்த வேலையெல்லாம் செய்கிறாய் என்று கேட்டார். சிவகாமி ,ஆளுக்கு ஒரு வேலையாக இருக்கிறார்கள் அதனால் தான் செய்வதாக கூறினார். சரவணன் கடையில் ஆட்கள் அலை மோதுகிறார்களே நல்ல கூட்டம், எல்லாம் சந்தியாவின் நல்ல எண்ணம் தான் என்று கூறினார். உடனே சிவகாமி, என் மகன் திறமை இல்லாமலா இந்த போட்டியில் வெற்றி பெற்று வந்தான் என்று தன் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினார். பின் தன் மகனும் மருமகளும் இப்படி தான் காசு பணம் பேர் புகழ் வந்ததும் தனி குடுத்தனம் சென்றார்கள் என்று கூறினார். அதனால் மருமகளை கவனித்துக்கொள் என்றார். சிவகாமி குளிக்க கிளம்பினார். அப்போது அர்ச்சனா கிழித்து வைத்த புடவையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சந்தியா தான் இதை துவைத்தாள் அவளுடைய வேலையாக தான் இருக்கும் என்று சிவகாமி நினைத்தார். உடனே சந்தியாவை அழைத்து , தன் புடவையை துவைக்க விருப்பம் இல்லை என்றால் எதற்கு துவைத்து என் புடவையை வீணாக்க வேண்டும் என்று கேட்டார். சந்தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சிவகாமி மீண்டும் மீண்டும் சந்தியாவை தவறாக நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…