Raja Rani 2 Today Episode | 16.02.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஞாயிற்றுக்கிழமையிலும் வேலைக்கு கிளம்பினார். அப்போது சரவணன் இன்று கூட வீட்டில் குடும்பத்தோடு இல்லாமல் சந்தியா எப்படி போகிறார் என்று நினைத்தார். இன்று எதோ ஒரு புது அதிகாரி பொறுப்பு ஏர்க்கிறார். அதற்கு தான் சந்தியா அவரை வரவேற்க போக வேண்டும் என்று கிளம்பினார். ஆனால் அவர் கிளம்பும் நேரம் பார்த்து சிவகாமி வேண்டும் என்றே அவரை மீன் வாங்க மார்கெட்டிற்கு அனுப்பினார். சந்தியாவும் அதற்கு மறுக்க முடியாமல் அவரே வாங்க கிளம்பினார். பின் மீன் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்ததும் கிளம்பலாம் என்று நினைத்தார். ஆனால் அதற்கும் சிவகாமி மீன் குழம்பு வைக்க வேண்டும் என்று கூறினார். அதையும் சரி என்று ஒப்புக்கொண்டு சமைக்க கிளம்பினார். அவருக்கு சரவணன் உதவியோடு மீன் குழம்பு வைத்து முடித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author