Raja Rani 2 Today Episode | 16.06.2022 | Vijaytv
Raja Rani 2. 16.06.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சாந்தியாவுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருப்பதை சிவகாமி விரும்பவே இல்லை. இதனால் தனியாக மொட்டை மாடியில் நின்று யோசித்துக்கொண்டு இருந்தார். பின் குடும்பத்தில் அனைவரும் அவரை நாளை விழாவுக்கு கிளம்ப வேண்டும் என்று பேசும்போது தான் வரப்போவது இல்லை என்று கோவமாக கூறினார். பின் சந்தியாவிடம் தனியாக தன் கோவத்தை கொட்டித்தீர்த்தார். தன் குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் போதும். சரவணன் இடம் பேசி இந்த விழாவுக்கு போகாமல் இருக்க சொல்லியும் நீ அதை செய்ய வில்லை. உனக்கு இவளோ நெஞ்சலுத்தம் என்று சீறினார். இதனால் அடுத்த நாளே கமிஷனரை பார்த்து தனக்கு இந்த பாராட்டு விழா வேண்டாம் என்று கூறினார். அவரும் அதை மறுத்து பேசினார். ஆனால் சந்தியா தனக்கு இந்த பாராட்டு விழா கண்டிப்பாக நடக்க கூடாது என்று உறுதியாக இருந்தார். மேலும் செல்வம் தப்பித்து ஓடிய பின் எதற்கு இந்த விழா என்று தயங்கினார். பின் அந்த விழாவை நிறுத்தவும் வைத்தார். இதை கேள்வி பட்ட சரவணன் சோர்வடைந்து பேசினார். ஆனால் சிவகாமி மற்றும் அர்ச்சனாவுக்கு இது பெரிய சந்தோசத்தை கொடுத்தது.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…