Raja Rani 2 Today Episode | 16.11.2022 | Vijaytv
Raja Rani 2. 16.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் உடல் நிலையை பற்றி விசாரித்தார் சரவணன். பின் அவர் நினைப்பிலேயே இருந்தார் சரவணன். அதை கவனித்த சிவகாமி, என்ன என்று விசாரித்தார். அதற்கு சரவணன் நடந்ததை கூறினார். இந்த போட்டியால் சந்தியாவுக்கு காலில் சுளுக்கு விழுந்து, காய்ச்சலில் இருப்பதை கூறினார். உடனே சிவகாமி அவரை பார்க்க சென்னைக்கு கிளம்பலாம் என்றார். ஆனால் அதற்கு ரவி அப்பா அதெல்லாம் எதுவும் தேவை இல்லை என்றார். சந்தியாவை படுக்க வைத்து அவரை ஓய்வு எடுக்க வைத்தார். அந்த நேரம் தான் சந்தியா சைக்கிள் பந்தயத்தில் 23வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு சரவணன் தான் மாற்றி வைக்க சொன்னார் என்று ஜோதி கூறினார். அதை கேட்டு சந்தியா மிகவும் சந்தோசம் அடைந்தார். தன் மேல் தன் கணவர் இவளோ நம்பிக்கை வைத்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். பரந்தாமன் செந்தில் இடம் வந்து உன் அண்ணனும் போட்டியில் கலந்து கொள்கிறார். உனக்கு உன் வீட்டிலே தான் எதிரி என்று கிளப்பி விட்டார். அர்ச்சனா தன் கணவர் தான் தலைவர் ஆக வேண்டும் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…