ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் நண்பர்கள் சல்மா மற்றும் ஹேன்னாவை தென்காசியை சுற்றி காட்ட ஏற்பாடு செய்தார். வீட்டில் அனைவரும் போகலாம் என்று கிளம்பினார்கள். அப்போது வீட்டுக்கு போலீஸ் வந்தது. அதை பார்த்ததும் அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள். அவர்கள் வந்து சந்தியாவிடம் பூங்கொத்து கொடுத்து சரவணனுக்கு வாழ்த்து சொல்ல தான் வந்ததாக கூறினார்கள். கமிஷனர் தான் அனுப்பி வைத்தார் எனவும் கூறினார்கள். பின் கமிஷனர் சரவணன்க்கு வாழ்த்து கூறினார். இதை பார்த்த அர்ச்சனாவுக்கு எரிச்சலாக இருந்தது.பின் அனைவரும் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார்கள். பாஸ்கரும் அவர்களுடன் சேர்ந்து கிளம்பினார். இது எதுவுமமே அர்ச்சனாவுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் வேறு வழி இல்லாமல் அவரும் கிளம்பினார்.இதற்கிடையில் தன் ஐ.பி.எஸ் கனவை பற்றி பேச வேண்டும் என்று சந்தியா நினைத்து பார்க்கிறார். அடுத்து என்ன நடந்தது? அவர் கனவை பற்றி சரவணன் இடம் பேசினாரா? காணொளியை பார்க்க…