Raja Rani 2 Today Episode | 17.08.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வீட்டில் உள்ள வேலைகளையும் பார்த்து வைத்து விட்டு அவரது பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்தார். ஆனால் அர்ச்சனா மீண்டும் அவரை படிக்க விடாமல், கிண்டல் கேலி என்று இருந்தார். எப்படியும் பாட்டி சொல்வதை மீறி தன் மாமியார் உன்னை போலீஸ் வேலைக்கு அனுப்ப மாட்டார். பின் எதற்காக படித்து உன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் இனிப்பு கடைக்கு என்ன தேவையோ அதை செய்யும் வழியை பார்க்க சொன்னார். சிவகாமி பூஜை அறைக்கு அனைவரையும் அழைத்து பேசினார். தன் மாமியார் சொன்னதையும் மனதில் வைத்து ஒரு முடிவு எடுத்து இருப்பதாக கூறினார். த்ன மமையர் சொன்னதிலும் நியாயம் இருந்தாலும், அது இந்த குடும்ப சூழ்நிலைக்கு ஒத்து வராது, சந்தியா அப்படி பட்ட ஆளும் இல்லை. அதனால் அவள் பரிட்சை எழுதி போலீஸ் ஆகட்டும் என்று அவரது முடிவை கூறினார். சந்தியாவும் தன் மாமியார் மாமனார் இடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டார். அதே நேரம் ஆதி ஜெஸ்ஸியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டை சுற்றி காட்ட நினைத்து ஆதியை வீட்டுக்கு உள்ளே விட்டார் ஜெஸ்ஸி. ஆனால் வீட்டை சுத்தி பார்த்த பின் ஆதி தன் காதல் பரிசு என்று ஒரு மோதிரத்தை பரிசளித்தார். பின் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…