Raja Rani 2 Today Episode | 17.11.2022 | Vijaytv
raja rani 2. 17.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியின் கடை திறப்பு விழா ஆரம்பம் ஆனது. அதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அப்போது ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கலாம் என்று சொன்னதும் உடனே ஆதி அவனது மாமனாரை வர சொல்லி அவரை வெட்ட வைத்து திறந்தார். இதை பார்த்த சிவகாமி மனம் நொந்து போனது. வீட்டில் உள்ள அனைவருமே இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சபையில் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக விழாவில் நின்றார்கள். அப்போது அர்ச்சனா சிவகாமியை மேலும் கொம்பு சீவி விட்டார். உங்களை ஓரம் தள்ளி விட்டு மாமனாரை ரிப்பன் வெட்ட வைத்து விட்டேன் ஆதி என்று கூறினார். ஆனால் சிவகாமி தனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார். அந்த நேரம் செந்தில் தேர்தலில் நிற்க போவதாக ஒரு கோஷ்டி அவருக்கு கோஷம் போட்ட படி வந்தார்கள். அதே போல் சற்று நேரத்தில் சரவணனுக்கு ஆதரவாக சில பேர் வந்தார்கள். இதை பார்த்து வீடே அதிர்ச்சி அடைந்தது. வீட்டுக்கு சென்று யார் போட்டியிடுவார் என்று பேசிகொள்ளலாம் என்று சிவகாமி சொன்னாலும் அதை கேட்கவில்லை அர்ச்சனா. தன் கணவன் தான் நிற்க வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…