ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அவர் திட்டம் போட்ட படி நாடகத்தை நடத்தினார். அதில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றியும், அவர்களின் வீரத்தை பற்றியும் திறமையை பற்றியும் பெருமையாகவும் அதை சிவகாமிக்கு உணர்த்தும் வகையிலும் நாடகத்தை முடித்தார். பின் வீட்டுக்கு வந்ததும் சிவகாமி இடம் நாடகம் எப்படி இருந்தது எனவும் கேட்டார். ஆனால் சிவகாமி அதை பெரிதாக கண்டுகொள்ளாதது போல் பேசினார். பின் சரவணன் சந்தியாவின் இலட்சியத்தை அடைய நாம் தான் வழி காட்ட வேண்டும் என்றார். எப்படியும் அவரை அடுத்து படிக்க வைத்து போலீஸ் ஆக்க வேண்டும் என்று கூறினார்.ஆனால் அதை விருப்பம் இல்லாமல் கேட்டார் சிவகாமி. சிவகாமி அவர் பதிலை சொல்வதற்கு முன்னரே சந்தியா பேச ஆரம்பித்தார். தனக்கு இந்த போலீஸ் கனவு இருந்தது உண்மை தான் ஆனால் அது இப்போ இல்லை என்றார். தனக்கு அதில் விருப்பம் இல்லை என்றார். இந்த குடும்பத்தில் நிம்மதியை கெடுத்து நான் போலீஸ் ஆக விருப்பம் இல்லை என்றார். ஆனால் சரவணன் விடவில்லை. என் மீது சத்தியம் செய்யுமாறு கூறினார். அதற்கு சந்தியா என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…