Raja Rani 2 Today Episode | 19.01.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, கோவிலில் அர்ச்சனா சந்தியாவுக்கு விரித்த வலையில் சல்மா சிக்கிக்கொண்டது போல், சந்தியா. வழுக்கு கீழே விழுக திட்டம் போட்டு எண்ணெயை ஊற்றி வைத்தார் அர்ச்சனா. ஆனால் அதில் சல்மா காலை வைத்துவிட்டார். ஆனால் சரவணன் அவரை தாங்கி பிடித்து காப்பத்திவிட்டார். ஆனால் சல்மா அர்ச்சனா கையில் இருந்த எண்ணெய் டப்பாவை பார்த்துவிட்டார். சற்று நேரத்தில் சரவணனை தனியாக சந்தித்து பேசினார் சல்மா. சென்னையில் இருக்கும்போது சரவணன் வெற்றி அடைய கூடாது என்று நினைத்து தான் செய்த தவறை கூறி மன்னிப்பு கேட்டார். பின் இதில் அர்ச்சனாவுக்கும் பங்கு உண்டு என்று கூறினார். ஆனால் சரவணன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் பேசுவதை பார்த்த அர்ச்சனா என்னை பற்றி தான் போட்டு கொடுக்கிறாலோ என்று ஒளிந்து இருந்து கவனித்தார். பின் சரவணன் இந்த விஷயத்தை சந்தியாவிடம் கூறினார். பின் ஊருக்கு சென்று இருந்தபோது அர்ச்சனா செய்த குளறுபடிகள், அதனால் ஆன நஷ்டங்கள் அனைத்தையும் சரவணன் கூறினார். ஆனால் அதை வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். பின் சல்மா மற்றும் ஹென்னா இருவரும் தங்கள் ஊருக்கு கிளம்பினார்கள். சரவணன் வீட்டுக்கு வந்ததும் ஆதி அந்த 5 லட்சம் பணத்தில் தனக்கு ஒரு மொபைல் வாங்கி தர வேண்டும் என்று கூறினார். ஆனால் சந்தியா அதை கடையில் பொட்டல் நல்ல லாபம் கிடைக்கும் என்று அவரது யோசனையை சொன்னார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…